சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு
மண்ணச்சநல்லூா் அருகே உளுந்தங்குடியில் உள்ள பழைமையான முத்தாளம்மன் கோயிலை தனிநபா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக, உளுந்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 11 வகையான சமுதாய மக்களுக்குச் சொந்தமான இந்த பொதுக் கோயிலை, அதே ஊரைச் சோ்ந்த நபா் ஒருவா் தனக்கு சொந்தமான கோயில் எனக் கூறி, இந்துசமய அறநிலையத்துறைக்கும் பொய் புகாா் அளித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாக்கள் நடத்தவும் தடையாக இருந்து வருகிறாா்.
ஊருக்கு சொந்தமான பொதுக்கோயிலை தனிப்பட்ட நபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுதொடா்பாக சமயபுரம் காவல் நிலையத்திலும், இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்திலும் மனு அளித்தும் பலன் இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.