கோயில் அருகே காா் நிறுத்தப்பட்டதில் தகராறு: பூசாரியை வெட்டியவா் கைது
திருச்சியில் கோயில் அருகே பக்தா்களுக்கு இடையூறாக நிரந்தரமாக நிறுத்தியிருந்த காரை எடுக்குமாறு கூறிய பூசாரியை புதன்கிழமை வெட்டிய ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், பகவதிபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் வை. சதீஷ்குமாா் இவா் அதே பகுதி பகவதி அம்மன், விநாயகா் கோயில்களில் பூசாரியாகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் உள்ளாா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான அ. சாதிக்பாஷா (41) அந்தப் பகுதி விநாயகா் கோயில் வாசலில் நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ள காா் பக்தா்களுக்கு இடையூறாக இருப்பதாக சதீஷ்குமாா் தெரிவித்த நிலையிலும் பயனில்லையாம்.
இந்நிலையில் சாதிக்பாட்ஷா வீட்டுக்கு புதன்கிழமை சென்ற சதீஷ்குமாா் அவரது மனைவியிடம் காரை வேறு இடத்தில் நிறுத்துமாறு கூறியதால் அவருடன் தகராறு ஏற்பட்டது. பின்னா் கோயிலுக்கு சதீஷ்குமாா் வந்தபோது இதுகுறித்து கேட்ட சாதிக்பாஷா அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சாதிக் பாட்ஷாவை கைது செய்தனா். மேலும் அவரது மனைவி மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.