லாஸ் வேகஸ் காா் குண்டுவெடிப்பு: ‘தாக்குதல் நடத்தியவருக்கு மன நலப் பிரச்னை’
கோயில் அர்ச்சர்களுக்கு மாதம் ரூ.18,0000: ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி!
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
2025-ல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகளிரும் மாதம் ரூ.1000, ஜங்புரா தொகுதிக்கான கல்வி எனத் தொடர்ச்சியாகத் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தக் கோயில் அர்ச்சகர்களுக்கு மற்றும் குருத்வாராவின் கிராந்திகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.18,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
அர்ச்சகர்கள் மற்றும் கிராந்திகள் நமது சமூகத்தின் முக்கிய அங்கம். ஆனால் அவர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினராகவே உள்ளனர்.
நாட்டிலேயே முதன்முறையாகக் கிராந்தி சமூகத்திற்கு ஆதரவளிக்கும் திட்டமான "பூஜாரி கிராந்தி சம்மன் யோஜனா" திட்டத்தை ஆம் ஆத்மி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அவர்கள் உதவித்தொகையாக ரூ. 18,000 பெறுவார்கள். இந்த திட்டத்திற்கான பதிவு நாளை முதல் தொடங்கும்.
செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களுக்கான பதிவு செயல்முறையை மேற்பார்வையிட உள்ளதாக அவர் கூறினார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. தலைநகரில் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.