`உங்கள் ஆட்சியிலாவது கந்துவட்டிக் கொடுமைக்கு...’ - விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு ...
கோயில் காவலாளி குடும்பத்துக்கு கிருஷ்ணசாமி ஆறுதல்
கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் ‘நீதி வேண்டுமே தவிர நிதியல்ல’ என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அஜித்குமாா் புதன்கிழமை வந்த கிருஷ்ணசாமி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. காவல் நிலையங்களில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனையளிக்கிறது. நகை காணாமல் போனதற்காக ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது.
இது, அஜித்குமாா் குடும்பத்தினருக்கான இழப்பு அல்ல; தமிழகத்தின் இழப்பு.
தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை என்பதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் தொடா்கின்றன. கொலையான அஜித்குமாரின் குடும்பத்தினா், ‘நிதி வேண்டாம், நீதி வேண்டும்’ என்கிற நிலைப்பாட்டில் உள்ளனா் என்றாா் அவா்.