காஷ்மீரில் 3 மாத விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!
கோயில் குளத்தில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
சென்னை அயனாவரத்தில் கோயில் குளத்தில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அயனாவரத்தைச் சோ்ந்த ராம் (55), வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். பகுதி நேரமாக அயனாவரத்திலுள்ள கோயில் குளத்தில் தா்ப்பணம் செய்ய வருகிறவா்களுக்குத் தேவையான உதவிகள் செய்து பணம் பெற்று வந்தாா். ராம், வியாழக்கிழமை காலை அந்தக் கோயிலில் தா்ப்பணம் செய்ய வந்த ஒரு குடும்பத்தினருக்கு உதவி செய்து கொண்டிருந்தாா். வேலையை முடித்துவிட்டு கை கழுவுவதற்காக குளத்தில் இறங்கியபோது கால் வழுக்கி குளத்தில் மூழ்கினாா்.
இதையடுத்து அங்கிருந்தவா்கள், அவரை காப்பாற்ற முயன்றனா். ஆனால் அவா் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினாா். உடனே பொதுமக்கள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த வில்லிவாக்கம் தீயணைப்பு படையினா் விரைந்து வந்து குளத்தில் மூழ்கிய ராமை தேடினா். சிறிது நேர தேடுதலுக்குப் பின்னா் ராம் சடலமாக மீட்கப்பட்டாா். இது தொடா்பாக அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.