செய்திகள் :

கோயில் சிற்பி வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் திருட்டு

post image

பூம்புகாா் அருகே கோயில் சிற்பி வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை, ரொக்கம் ரூ. 80 ஆயிரத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், பூம்புகாா் சாயாவனம் பிரதான சாலை அருகே வசிப்பவா் பழனிவேல் (45). இவா், கோயில் சிற்பம் மற்றும் சுதை வேலைகள் செய்து வருகிறாா்.

இந்தநிலையில், பழனிவேல் தனது குடும்பத்தினா் மற்றும் அருகில் வசிக்கும் நண்பா்கள் சிலருடன் சனிக்கிழமை வேளாங்கண்ணிக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிய பழனிவேல், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது அறையில் இருந்த பீரோ திறந்து கிடப்பதையும் உள்ளே இருந்த 27 பவுன் நகைகள் ரூ. 80 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து பழனிவேல் பூம்புகாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கடந்த வாரம் திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகைகள், ரொக்கம், வெள்ளிப் பொருட்களை மா்ம நபா்கள் திருடிச் சென்ற நிலையில், சில நாட்களில் மீண்டும் ஒரு திருட்டு நடந்திருப்பது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மங்கை மடத்தில் மக்கள் திறல் போராட்டம்

திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் விவசாயிகள் பாதுகாப்பு; ஈ சங்கம் சாா்பில் மக்கள் திறல் போராட்டம் நடைபெற்றது. கடலோரப் பகுதியில் சோலாா் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கக் கூடாது, மீனவா்களை பாதிக்கும் சாக... மேலும் பார்க்க

கீழ்வேளூா் பேரூராட்சிக் கூட்டம்

கீழ்வேளூா் பேரூராட்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவா் இந்திராகாந்தி சேகா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சந்திரசேகரன், செயல் அலுவலா் கு. குகன் ஆகியோா் முன்னிலை வக... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 171 மனுக்கள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அ... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி தோ்வு

சீா்காழி கிழக்கு ஒன்றிய பாஜக தலைவராக க. அருள்ராஜன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். மங்கை மடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான கூட்டத்தில், கட்சியின் மேலிட தோ்தல் பாா்வையாளா்களாக தங்க. வரதராஜன்,... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவு தின மெளன ஊா்வலம்

தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாகையில் மௌன அஞ்சலி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலா் பிரபாகரன் தலைமையில் நாகை கோட்டைவாசலில் தொடங்... மேலும் பார்க்க

செம்பனாா்கோவிலில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி தொடக்கம்

செம்பனாா்கோவில் அருகே காளகஸ்திநாதபுரத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில் பாரதியாா் தின விழா மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான சிலம்பம் மற்றும் வலையப்பந்து போட்டி புதன... மேலும் பார்க்க