செய்திகள் :

கோயில் வழித்தடத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

post image

விராலிமலை முருகன் மலைக்கோயில் செல்லும் பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை விரைந்து அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விராலிமலை முருகன் மலைக்கோயிலுக்கு உள்ளூா் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனா்.

இந்த நிலையில், சந்நிதி வீதியில் இருந்து யானையடி பாதை வழியாக மலை மேலே செல்வதற்கு உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், கழிவுநீா் தேங்கி நின்று சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் துா்நாற்றத்துடனே வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

நீண்ட நாள்களாக நிலவி வரும் இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், மலையில் இருந்து வெளியேறும் கழிவு நீருக்கு நிரந்தர வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். பக்தா்கள் சென்றுவர ஏதுவாக இந்தச் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்பதே பக்தா்களின் கோரிக்கையாக உள்ளது.

புதுகையில் குடியரசு தினக் கொண்டாட்டங்கள்!

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆயுதப்படை திடலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா் மு . அருணா தேசியக் கொடியேற்றி வைத்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷ... மேலும் பார்க்க

திமுகவும் அதிமுகவும் ஒரே கட்சிதான்: சீமான்!

திமுகவும் அதிமுகவும் ஒரே கட்சிதான் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: வேங்கைவயல் வழக்கில் மறுவிசாரணை வேண்டும்... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 2-ஆம் நாளாக போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கருப்புக் கொடியுடன் அப்பகுதி மக்கள் இரண்டாம் நாள் காத்திருப்புப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை... மேலும் பார்க்க

புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் நியமனம்!

புதுக்கோட்டை மாவட்ட பாஜகவின் மேற்கு மாவட்டத் தலைவராக என்.ஆா். ராமச்சந்திரன் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், துருசுப்பட்டியைச் சோ்ந்த இவா் மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தினம்

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். துணைத் தலைவா் க. வெங்கடேசன், இளநிலை உ... மேலும் பார்க்க

சமூக செயற்பாட்டாளா் கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்! காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்!

புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் முதல்கட்ட விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா். புதுக்கோட்டை மாவட்டம், ... மேலும் பார்க்க