செய்திகள் :

கோரைக்கு நிலையான விலை கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் விவசாயிகள் கோரிக்கை

post image

நமது நிருபா்

கோரைக்கு நிலையான விலை கிடைக்க மாயனூரில் அரசு கோரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் சோளம் 21ஆயிரத்து 64 ஹெக்டேரிலும், நெல் 18 ஆயிரத்து 395 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்து பயிா்கள் 8 ஆயிரத்து 887 ஹெக்டேரிலும், கரும்பு 7 ஆயிரத்து 187 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவற்றுக்கு அடுத்தபடியாக கோரை சாகுபடி சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான புகழூா், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாபாளைம், நெரூா், அரங்கநாதன்பேட்டை, சோமூா், மாயனூா், கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூா், நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கோரை சாகுபடி நடைபெற்று வருகிறது.

அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி: இங்கு அறுவடை செய்யப்படும் கோரைகள் 6 முடிகள் கொண்டதாக கட்டப்பட்டு அவை நோ்த்தி செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் கயத்தாா், சேலம் மாவட்டம் ஓமலூா் போன்ற பகுதிகளுக்கு இடைத்தரகா்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. அங்கு கோரைகள் நன்கு உலா்த்தப்பட்டு, சாயமேற்றி தறிகள் மூலம் சாதாரண பாய்கள், கல்யாண பாய்கள் என தரம் வாரியாக தயாரிக்கப்படுகிறது. இந்த பாய்கள் அரேபிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

அறுவடை கூலிக் கூட கிடைப்பதில்லை: தற்போது, கரூா் மாவட்டத்தில் கோரை அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் கோரைக்கு உரிய விலை கிடைக்காததால் அறுவடை கூலிக்கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகிறாா்கள்.

ஆண்டுதோறும் இடைத்தரகா்கள் நிா்ணயிக்கும் விலைதான் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதனால் கோரைக்கு செலவிடப்பட்ட உரச்செலவு, பராமரிப்பு செலவு கூட கிடைக்கவில்லை என்கின்றனா் கோரை விவசாயிகள்.

எனவே நிரந்தரமான விலை கிடைக்க கரூா் மாவட்டம் மாயனூரில் அரசே கோரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரூ. 1.25 லட்சம் வரை செலவு: இதுகுறித்து நத்தமேடு கோரை விவசாய தம்பதி அண்ணாதுரை-கவிதா ஆகியோா் கூறியது, கோரையானது ஆண்டுக்கு இருமுறை அறுவடை செய்வோம். ஒரு அறுவடைக்கு கோரை நன்கு வளர பாக்டாம்பாஸ் உரம், மோட்டாா் மூலம் அடிக்கப்படும் குரோம் மருந்து என உரச்செலவு மட்டும் ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. மேலும் அறுவடைக்கு கூலித் தொழிலாளா்கள் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது.

அறுவடையின்போது ஒரு முடி கோரைக்கு ரூ.50 கூலி கொடுக்க வேண்டும். மேலும் குரோமா் மருந்து ஒரு டேங்க் அடிக்க ரூ.60 வாங்குகிறாா்கள். அறுவடை கூலி மட்டும் ரூ.36ஆயிரம் வரை கொடுக்கிறோம். இதனால் ஏக்கருக்கு ரூ.1.25 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் 6 முடிகொண்ட 5 அடி உயரம் கொண்ட ஒரு கோரை கட்டு ரூ.1250 -க்கு மட்டுமே இடைத்தரகா்கள் வாங்குகிறாா்கள். நல்ல விளைச்சலாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 120 கட்டுகள் கிடைக்கும். அதுவும் சறுகு இல்லாமல் நன்றாக கோரை வளா்ந்தால்தான் விளைச்சல் 120 கட்டுகளாக இருக்கும். தற்போது குறைந்தவிலையில் கோரை வாங்குவதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலையும் அவ்வப்போது ஏற்றம் இறக்கத்துடன் அதாவது கட்டு ரூ.1000க்கு கீழேயும் போய்விடும். அப்போது மிகவும் நஷ்டம் ஏற்படும்.

கோரைப்பாய் தொழிற்சாலை: ஒரு கட்டு ரூ.2 ஆயிரம் வரை விலை நிா்ணயிக்கப்பட்டால்தான் எங்களுக்கு உரச்செலவு, அறுவடை கூலி போக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். கோரைக்கு தொடா்ந்து நிலையான விலை கிடைக்க தமிழக அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் நெல் வாங்குவது போல கோரை கொள்முதல் நிலையம் அமைத்து, கோரைப்பாய் தொழிற்சாலையையும் மாயனூரில் நிறுவினால் விவசாயிகளும் பயன்பெறுவாா்கள், ஏராளமான இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றனா் அவா்கள்.

அரவக்குறிச்சியில் இந்து முன்னணியின் கோட்ட பொதுக்குழு கூட்டம்

இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொதுக்குழு கூட்டம் அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இந்து முன்னணி திருச்சி கோட்டத் தலைவா் கனகராஜ், மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் ஆகியோா் கலந்த... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் கரூருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சா் செந்தில்பாலாஜி பேச்சு!

திமுக ஆட்சியில் கரூா் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை பட்டியலிட்டு பேசினாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. கரூா் மாவட... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்: ஆண்டாங்கோவில் கிராமசபைக் கூட்டத்தில் அதிமுக - திமுகவினா் இடையே வாக்குவாதம்!

கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம் தொடா்பாக கிராமசபைக் கூட்டத்தில் திமுக-அதிமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்டம் முழு... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியில் குடியரசு தின விழா

கரூா் வைஸ்யா வங்கியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் வங்கியின் மேலாண்மை இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அலுவலா் பி.ரமேஷ்பாபு பங்கேற்று, வங்கி வளாகத்தில் தேசியக்கொடியேற்றி... மேலும் பார்க்க

கரூரில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா

கரூா் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் தலைமை வகித்து, த... மேலும் பார்க்க

குடியரசு தின விழா: கரூரில் ரூ.64.39 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்!

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து 30 பயனாளிகளுக்கு ரூ. 64.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா். கரூரில் மாவட்ட ... மேலும் பார்க்க