செய்திகள் :

`கோல்டு காபி ஆர்டர் செய்துள்ளார்'- டெலிவரி பாய் வேடத்தில் ஷாருக் கான் பங்களாவில் நுழைய முயன்ற ரசிகர்

post image

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள மன்னத் பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது அந்த பங்களாவில் கூடுதல் மாடிகள் கட்டி புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள கட்டடத்தில் 4 மாடிகளை வாடகைக்கு எடுத்து அதில் ஷாருக் கான் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். ஷாருக் கானின் மன்னத் பங்களா எப்போதும் மும்பையில் ஒரு சுற்றுலா மையமாகவே இருந்து வருகிறது. ஷாருக் கானை பார்க்கவும், அவரது வீட்டிற்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஏராளமானோர் அங்கு வருவது வழக்கம். ஆனால் ஷாருக் கானை யாராலும் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. சோசியல் மீடியாவில் பிரபலமான சுபம் பிரஜாபத் என்பவர் ஷாருக் கானை எப்படியாவது பார்க்க ஆசைப்பட்டார்.

சுபம்

இதற்காக ஷாருக் கான் பங்களாவிற்கு சென்றார். ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் உள்ளே விடவில்லை. ஆனாலும் மனம் தளராமல் சுபம் வேறு வழியில் ஷாருக் கானை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக மாற்றுத்திட்டம் ஒன்றை ஆலோசித்தார். சுபம் நடிகர் ஷாருக் கான் பெயரில் இரண்டு கோல்டு காபி ஆர்டர் செய்தார். அதில் ஒன்று ஷாருக் கானுக்கும் மற்றொன்று தனக்கும் என ஆர்டர் செய்திருந்தார். அந்த காபி வந்தவுடன் அதனை எடுத்து வந்த டெலிவரி பாயிடம் பேக்கோடு அவற்றை தன்னிடம் கொடுக்கும்படி கெஞ்சி கேட்டு வாங்கிக்கொண்டு ஷாருக் கான் பங்களாவிற்கு சுபம் சென்றார்.

டெலிவரி பாய் கொடுத்த பேக்கை எடுத்துக்கொண்டு மன்னத் பங்களாவின் முன்கேட்டிற்கு சுபம் சென்றார். கோல்டு காபி ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதாக சுபம் தெரிவித்தார். உடனே மெயின் கேட்டில் இருந்த பாதுகாவலர்கள் சுபத்தை உள்ளே விடவில்லை. பின்புறம் இருக்கும் ரகசிய வழி வழியாக செல்லும்படி கேட்டுக்கொண்டனர். உடனே சுபம் பின் வாசல் வழியாக உள்ளே சென்றார். அங்கு நின்ற பாதுகாவலரிடமும் கோல்டு காபி ஆர்டர் செய்திருப்பதாக சுபம் தெரிவித்தார். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் யார் காபி ஆர்டர் செய்தது என்றும், ஆர்டர் செய்த நபருக்கு போன் செய்து தங்களிடம் கொடுக்கும்படியும் கேட்டனர்.

ஆனால் அதற்கு சுபத்தால் சரியாக பதில் கொடுக்க முடியவில்லை. உடனே அங்கு நின்ற பாதுகாவலர், ஷாருக் கான் ஒரு போன் செய்தால் அனைத்து காபி தயாரிப்பாளர்களும் அவர் முன்பு வந்து நிற்பார்கள் என்று கூறி சுபத்தை அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்த நிகழ்வுகளை சுபம் வீடியோவாக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இருக்கிறது.

இத்தாலி: சபிக்கப்பட்ட கற்களை திருடிய சுற்றுலாப் பயணி... என்ன நடந்தது?

இத்தாலியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சுற்றுலாத்தளமான பொம்பெயி (pompeii)-ல் கலைப்பொருட்களை முதுகுப்பையில் வைத்து திருடிச் செல்ல முயன்ற 51 வயது ஸ்காட்லாந்து சுற்றுலாப் பயணி பிடிபட்டுள்ளார். பண... மேலும் பார்க்க

அமெரிக்கா: 33 ஆண்டுகளில் 24 மில்லியன் மைல்; விமான பயணத்தில் சாதனை; யார் இந்த பயணி டாம் ஸ்டூக்கர்?

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த 71 வயதான டாம் ஸ்டூக்கர் என்பவர், ஒரு கார் விற்பனை ஆலோசகராகவும், விற்பனை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.டாம் ஸ்டூக்கர் தனது வாழ்நாள் பயண அனுமதியைப் ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: புலிகள் வாழும் காட்டில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – சவாரி வாகனம் பழுதடைந்ததால் பரபரப்பு!

ராஜஸ்தானின் ரந்தாம்போர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற வாகனம் பழுதடைந்ததால் புலிகள் வாழும் காட்டில் பயணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் ஒன்றரை மணி நேரம் சிக்கித் தவித்துள்ள சம்பவம் பெரும் பரப... மேலும் பார்க்க

ஸ்வீடனின் 113 ஆண்டுகள் பழைமையான தேவாலயம் புதிய இடத்திற்கு மாற்றம் - என்ன காரணம் தெரியுமா?

ஸ்வீடனின் ஆர்க்டிக் பகுதியிலுள்ள புகழ்பெற்ற கிறூனா தேவாலயம், தரை இடிவு (landslide) மற்றும் நிலத்தடி இரும்புத்தாது சுரங்க விரிவாக்கத்தால் புதிய இடத்திற்கு மாற்றப்படுகிறது.600 டன் எடையுள்ள, 113 ஆண்டுகள்... மேலும் பார்க்க

சென்னை: வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் பிட்புல் நாய் கடித்ததால் உயிரிழப்பு – என்ன நடந்தது?

சென்னையில் உள்ள ஜாபர்கான் பேட்டை, VSM கார்டன் தெருவில் நடந்த துயரச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (48) என்பவர் சமையல் வேலை செய்து வருகிறார். நேற... மேலும் பார்க்க

`ஒரு கோழியின் கதை' ஆயுளைக் கடந்து; 14 ஆண்டுகள் கடந்து வாழும் ’உலகின் வயதான கோழி’ - ஆச்சர்ய பின்னணி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் ‘Pearl’ என்ற கோழி, சாதாரணமாக 3 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் கோழிகளின் சராசரி ஆயுளை மீறி, 14 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.Pearl... மேலும் பார்க்க