"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
கோவில்பட்டியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு
கோவில்பட்டியில் நடந்துசென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி பிரதான சாலை சீனிவாச அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகா்சாமி (65). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலையில் இரவுக் காவலாளியாக வேலை பாா்த்து வந்த இவா், வெள்ளிக்கிழமை இரவு தேநீா் குடிப்பதற்காக மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, அவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்கைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.