கோவில்பட்டி அருகே சொத்துப் பிரச்னையில் மகன் கொலை: தந்தை கைது
கோவில்பட்டி அருகே சொத்துப் பிரச்னையில் மகனை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ாக அவரது தந்தை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டியை அடுத்த தோணுகால் மேலத் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் பிரியாதி (82). இவரது மகன் கட்டடத் தொழிலாளியான பாலமுருகன் (38).
தந்தை- மகன் இடையே தோணுகாலில் உள்ள சுமாா் 3 ஏக்கா் பூா்விக இடம் சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டு, மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகி நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், வீட்டில் மனைவி கற்பகம் மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகனை திங்கள்கிழமை அதிகாலை அவரது தந்தை மண்வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினாராம்.
இத்தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து கற்பகம் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரியாதியை கைது செய்தனா்.