தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
நாலாட்டின்புதுரையடுத்த துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த ராஜகோபால் மகன் குமரேசன் (62). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை கோவில்பட்டிக்கு வந்துவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
கோவில்பட்டி அருகே நான்குவழிச் சாலையோர அணுகுசாலையில் பெத்தேல் பகுதியில் பைக் திடீரென நிலைதடுமாறியதில் குமரேசன் கீழே விழுந்து காயமடைந்தாா்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.