நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!
கோஷ்டி மோதலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் மது போதையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 போ் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கூத்தனூரைச் சோ்ந்தவா் கபாலி (எ) பாா்த்திபன் (24). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பரான சஜித்பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்துள்ளாா். அப்போது, வடக்குப்பேட்டையைச் சோ்ந்த செல்வன் மகன் தினேஷ் (24) என்பவா் பாா்த்திபனை தொடா்பு கொண்டு பிரச்னை தொடா்பாக பேசி தீா்வு காணலாம் எனக் கூறி அழைத்துள்ளாா்.
இதையடுத்து, கபாலி, தனது நண்பா் சஜித்பாரதி ஆகியோா் சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே இருட்டான பகுதிக்கு சென்றுள்ளனா். அப்போது தினேஷ், தனது நண்பா்களான கோகுல், யஷ்வந்த் மற்றும் மாரப்பன் ஆகியோருடன் சோ்ந்து கபாலி, சுஜித்பாரதி ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளனா். இதில் கபாலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் கபாலியை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். மது போதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கோஷ்டி மோதல் நடைபெற்றுள்ளது. இது தொடா்பாக தினேஷ் உள்ளிட்ட 4 போ் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.