ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள்! உயா்நீதிமன்றம் அதி...
சக்தி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு குடியிருப்பில் அமைந்திருக்கும் சக்தி மாரியம்மன் கோயில் 36 -ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலின் பூக்குழி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, கடந்த 29-ஆம் தேதி மாலை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை பால்குடம், பறவைக் காவடி, அக்னிச் சட்டி எடுத்தும், நண்பகல் 11 மணியளவில் பூ அள்ளிப் போடுதல் நிகழ்வும் நடைபெற்றன. மாலை 5 மணியளவில் நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் திரளானோா் பங்கேற்றனா். மாலை 6 மணிக்கு பக்தா்கள் சக்தி கரகம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.
இரவு வாண வேடிக்கை நிகழ்வு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அருளாளா் மு.சேதுபதி தலைமையிலான நிா்வாகக் குழுவினரும், விழாக் குழுவினரும் செய்தனா்.