சச்சின் ஓய்வுக்குப் பிறகு 150+ சேஸிங்கில் சொதப்பும் இந்திய அணி!
சச்சின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி சேஸிங்கில் மோசமான சாதனைகளை நிகழ்த்தி வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் 12 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 193 ரன்கள் தேவையான நிலையில் அதை சேஸ் செய்ய முடியாவில் ஆட்டமிழந்தது.
ஜடேஜா தனியாளாகப் போராடினாலும் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
சச்சின் ஓய்வுக்குப் பிறகு, டாப் 8 அணிக்கு எதிராக 150-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்யாமல் இந்திய அணி 26 முறை தோல்வியும் 2 முறை வெற்றியும் 7 முறை சமனிலும் முடிந்துள்ளது.
2021-இல் பிரிஸ்பேனிலும் 2024-இல் ராஞ்சியில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்தப் புள்ளி விவரங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.