செய்திகள் :

சஞ்சய் கபூரின் ரூ.30000 கோடி சொத்தில் கரிஷ்மா கபூர் குழந்தைகளுக்கு பங்கு கிடைக்குமா?

post image

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த மாதம் 12-ம் தேதி அகால மரணம் அடைந்தார். அவர் லண்டனில் போலோ விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது வாயிக்குள் ஒரு தேனீ சென்றது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சஞ்சய் கபூர் நடத்தி வந்த சோனா கொம்ஸ்டார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும். இந்த சொத்துக்கு இப்போது குடும்பத்தில் போட்டி ஏற்பட்டுள்ளது. சஞ்சய் கபூருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் ஆவர். இதில் நடிகை கரிஷ்மா கபூர் உள்பட இரண்டு மனைவிகளை சஞ்சய் கபூர் விவாகரத்து செய்துவிட்டார்.

கடைசியாக திருமணம் செய்த பிரியா சச்சிதேவ்தான் சஞ்சய் கபூர் இறக்கும்போது வரை மனைவியாக இருந்தார். பிரியா சச்சிதேவிற்கும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சஞ்சய் கபூர் இறந்தவுடன் சோனா கம்பெனியின் நிர்வாகிகள் கூடி பிரியா சச்சிதேவை கம்பெனியின் இயக்குனராக தேர்வு செய்துள்ளனர். இதற்கு சஞ்சய் கபூரின் தாயார் ராணி கபூர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதோடு தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இக்குற்றச்சாட்டை சோனா கம்பெனி நிர்வாகம் மறுத்துள்ளது. அதோடு சோனா கம்பெனியில் ராணி கபூர் பங்குதாரர் கிடையாது என்று கம்பெனி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சோனா கம்பெனியில் தனக்கு பங்கு இருப்பதாக கூறி சட்டநடவடிக்கை எடுக்கவும் ராணி கபூர் முடிவு செய்துள்ளார். சஞ்சய் கபூர் மூலம் நடிகை கரிஷ்மா கபூருக்கு 2 குழந்தைகள் இருக்கிறது.

எனவே சஞ்சய் கபூர் தனது குழந்தைகளுக்காக சஞ்சய் கபூரின் சொத்தில் பங்கு கேட்கப்போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கரிஷ்மா கபூர் சோனா நிறுவனத்தில் தனது பிள்ளைகளுக்கு பங்கு வேண்டும் என்று கோர முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் கரிஷ்மா கபூர் தரப்பில் இது தொடர்பாக எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. கரிஷ்மா கபூரை சஞ்சய் கபூர் விவாகரத்து செய்தபோது குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.14 கோடிக்கு பத்திரம் எடுத்து கொடுத்தார். இது தவிர கரிஷ்மா கபூருக்கு ஒரே தவணையாக ரூ.70 கோடி கொடுத்தார். இதனால் சஞ்சய் கபூரின் சொத்திற்கு உரிமை கோர கரிஷ்மா கபூருக்கு உரிமை கோர முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அதிகமான தீர்ப்புகளில் விவாகரத்தான பெண்ணின் குழந்தைகள் தங்களது தந்தையின் பூர்வீக சொத்தில் உரிமை கோர உரிமை இருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுடன் சஞ்சய், கரிஷ்மா

பெற்றோர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தாலும், அவர்களது பிள்ளைகளின் சொத்து உரிமையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று கோர்ட் தீர்ப்புகள் தெரிவித்துள்ளன. அதேசமயம் ஆண்கள் விவாகரத்துக்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் முதல் மற்றும் இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் சமபங்கு இருக்கிறது.

இந்து திருமண சட்டமும் தந்தையின் சொத்திற்கு குழந்தைகள்தான் முதல் வாரிசு என்று சொல்கிறது. எனவே அனைத்து வழிகளும் கரிஷ்மா கபூருக்கு ஆதராகவே இருப்பதால் தனது குழந்தைகளுக்காக கரிஷ்மா கபூர் சஞ்சய் கபூரின் சொத்தில் பங்கு கேட்பார் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கரிஷ்மா கபூருடன் சஞ்சய் கபூர்

கரிஷ்மா கபூர் மகளுக்கு இப்போது 20 வயதாகிவிட்டது. அவரது மகன் கியானுக்கு தற்போது 15 வயதுதான் ஆகிறது. சஞ்சய் கபூர் இறந்தபோது கரிஷ்மாகபூரின் இரண்டு குழந்தைகளும் தேம்பி தேம்பி அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

சஞ்சய் கபூர் இறந்த பிறகு கரிஷ்மா கபூருக்கு பிறந்த குழந்தைகளையும் தனது குழந்தைகளாக பாவிப்பேன் என்று பிரியா சச்சிதேவ் தெரிவித்து இருந்தார். எனவே பிரியா சச்சிதேவ் தானாக முன்வந்து கரிஷ்மா கபூர் குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லையெனில் கரிஷ்மா கபூர் கோர்ட் படிவேறுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றனர்.

கூகுள் மேப் போட்டு பயணம்; பாலத்தில் வேகமாக சென்ற கார், கடலுக்குள் விழுந்த சோகம்..

பொதுவாக வாகன ஓட்டிகள் தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும்போது கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் இந்த கூகுள் மேப் தவறான வழியை காட்டிவிடுகிறது. இதனால் பல வாகனங்கள் குழி, ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் பெண்களுக்கான Ladki Bahin திட்டத்தின் மூலம் ரூ.1500 வாங்கிய 14000 ஆண்கள்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 வழங்கும் லட்கி பெஹின் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் நேரம் என்பதால் விண்ணப்பித்த அனைவரது வங்க... மேலும் பார்க்க

5 மாதங்களில் பிறந்த அபூர்வ குழந்தை; கின்னஸ் உலக சாதனையில் பதிவு - ஆச்சர்ய பின்னணி என்ன?

அமெரிக்காவின் அயோவா நகரில், 21 வாரங்கள் மட்டுமே வளர்ச்சி கண்ட ஒரு குழந்தை, தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த குழந்தை, உலகின் மிக முன்கூட்டியே பிறந்த குழந்தையாக (World's Most Premature Baby) ... மேலும் பார்க்க

பொம்மையே வாழ்க்கை துணை... 4-வது பொம்மை குழந்தையை வரவேற்கும் இளைஞர் - பின்னணி என்ன?

கொலம்பியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மொன்டெனேக்ரோ, தனிமையில் இருந்து விடுபட, 2023 ஆம் ஆண்டு நடாலியா என்ற துணிப்பொம்மையுடன் உறவைத் தொடங்கினார். இவர்களுக்கு மூன்று பொம்மைக் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக... மேலும் பார்க்க

’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பதிவாளர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார். இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கையையும் அனுபவங்களையும் சமூ... மேலும் பார்க்க

இங்கிலாந்து: திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படக் காட்சி நிறுத்தம்: என்ன நடந்தது?

பவன் கல்யாண் நடித்த வரலாற்று காவிய திரைப்படமான ஹரி ஹர வீர மல்லு ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் அவரது ரசிகர் பட்டாளத்தால் பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த கொண்டாட்டங... மேலும் பார்க்க