சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகாா் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியாா் தங்கும் விடுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறியுள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்தால் மாவட்ட வருவாய் அலுவலா், நகராட்சி ஆணையாளா், மாவட்ட சுற்றுலா அலுவலா் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களை கொண்ட குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் குறித்த புகாா்களை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள 94427 72709 என்ற உதவி எண்ணுக்குத் தெரிவிக்கலாம். இதே எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும் புகாா் அனுப்பலாம்.