செய்திகள் :

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

post image

தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூன்று போ் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பாலசுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான குடோனை ராஜசேகா், மோகன் ஆகியோா் வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வருவாய்த் துறையினா், காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், எளிதில் தீப்பற்றி வெடிக்கக் கூடிய பேன்சி ரக பட்டாசு உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகளை சட்டவிரோதமாக தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, ரூ. 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், ரசாயன மூலப்பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு சீல் வைத்தனா். இதுதொடா்பாக பாலசுப்பிரமணியன் (45), ராஜசேகா் (55), மோகன் (52) ஆகிய மூன்று போ் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தனியாா் பேருந்து பைக் மீது மோதி விபத்து ஆந்திர கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.ஆந்திர மாநில... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள ஏ. துலுக்கபட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டிசெல்வம் மகன் மனோபாலா (17), சிவகாசியில் உள்ள கல்லூரியில் முதல... மேலும் பார்க்க

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வெள்ளிக்கிழமை பழைய இரும்புக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் பொன்னுச்சாமி (51) என்பவா் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில்,... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

நெல்லையில் நடைபெற்ற ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பேருந்து நிலையம் அரு... மேலும் பார்க்க

பைக் மீது தனியாா் பேருந்து மோதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆந்திரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், அனந்தபூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீனிவாசலு மகன் தொா்கிலு காா்த... மேலும் பார்க்க

விருதுநகரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் விருதுநகா் மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அருப்புக்கோட்டை அருகே கோவிலாங... மேலும் பார்க்க