ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
விருதுநகரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் விருதுநகா் மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான நிலத்தில் சிப்காட் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா்கள் எல். ஆதிமூலம், எம்.பி. ராமன், தென் மண்டலத் தலைவா் கட்டிக்குளம் மாணிக்கவாசகம், மதுரை மண்டலத் தலைவா் மதுரை வீரன், செயலா் உறங்காபுலி, 15 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.