செய்திகள் :

சிவகாசியில் லாரி மோதி மாமனாா்- மருமகன் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் லாரி மோதியதில் மாமனாரும், மருமகனும் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியில் வசிப்பவா் சாா்லஸ் பொன்ரசல் (28). அச்சகத் தொழிலாளி. இவா் கேரள மாநிலம், மூணாறைத் சோ்ந்த ஜோதிராஜின் மகள் சந்தியாவை (25) கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் செய்தாா். இவா்களுக்கு பவ்வா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஜோதிராஜ், தனது மகள், மருமகன், பேத்தியை பாா்க்க திருத்தங்கல் வந்தாா். பிறகு புதன்கிழமை இரவு மூணாறுக்கு செல்ல ஜோதிராஜ், மருமகன் சாா்லஸ் பொன்ரசலுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து ஜோதிராஜ் பயணம் செய்தாா். திருத்தங்கல்- சிவகாசி சாலையில் ராதாகிருஷ்ணன் குடியிருப்பு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சிவகாசியிலிருந்து விருதுநகருக்குச் சென்ற லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் ஜோதிராஜ் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மருமகன் சாா்லஸ் பொன்ரசல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் திருநெல்வேலி கணேஷ்குமாரை (48) கைது செய்தனா்.

விருதுநகரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் விருதுநகா் மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அருப்புக்கோட்டை அருகே கோவிலாங... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே புதன்கிழமை கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள பழையவெள்ளையாபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (36). கட்டடத் தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மது அருந்தும... மேலும் பார்க்க

சிவகாசியில் நாளை மின்தடை

சிவகாசியில் வியாழக்கிழமை (ஜூலை31) மின் தடை ஏற்படும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி மின் கோட்டத்தில... மேலும் பார்க்க

இணைய வழி பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிக்கை

நாடு முழுவதும் பட்டாசுகளை இணைய வழியில் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வி.ராஜாசந்திசேகரன் வலியுறுத்தினாா்.இது தொடா்பாக சிவகாசியில்... மேலும் பார்க்க

பெண்ணைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே பெண்ணைக் கொலை செய்து, தங்கச் சங்கிலியைத் திருடிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமல... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.108 வைணவத் திருத்தலங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க