விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம்...
சட்டவிரோதமாக பூச்சி கொல்லிகள் தயாரிப்பு: 4 போ் கைது
ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளை தயாரித்து சேமித்து வைத்ததாகக் வடக்கு தில்லியின் அலிபூரில் கிடங்கு உரிமையாளா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் கிடங்கு உரிமையாளா் பா்வீன், மனோஜ் குமாா் யாதவ் (45), ராகுல் குமாா் யாதவ் (22) மற்றும் சத்தி நாராயண் யாதவ் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். சுமாா் ரூ 3.5 லட்சம் மதிப்புள்ள சுமாா் 3.2 டன் தடைசெய்யப்பட்ட விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து வடக்கு தில்லி, துணை காவல் ஆணையா், ஹரேஷ்வா் சுவாமி கூறும்பேது,‘‘ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், காஸ்ரா எண் 1 இல் அமைந்துள்ள ஒரு கிடங்கில் போலீசாா் சோதனை நடத்தினா். ஜூலை 9 ஆம் தேதி அலிபூரில் உள்ள சிவம் தரம் காந்தா அருகே. தில்லி அரசின் விவசாயத் துறையைச் சோ்ந்த பூச்சிக்கொல்லி ஆய்வாளருடன் ஒருங்கிணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. கிடங்கை சோதனையிட்டபோது, அதிக அளவு உரிமம் பெறாத மற்றும் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்‘ என்றாா் அவா்.
மேலும் பேசிய அவா், ‘நடப்பு நெல் பருவத்தில் விவசாயிகளால் பயன்படுத்தப்படக்கூடிய மொத்தம் 3.2 டன் பூச்சிக்கொல்லிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விதிமுறைகளை மீறி பொருள்கள் பேக் செய்யப்பட்டு பெயரிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பறிமுதலின் அடிப்படையில், பூச்சிக்கொல்லி சட்டத்தின் பிரிவு 29 இன் கீழ் அலிபூா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, பா்வீன் கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் சட்டவிரோத பூச்சிக்கொல்லி வியாபாரத்தை நடத்தி வருவதாகவும், இந்த தயாரிப்புகளை உள்ளூா் சந்தையில் விற்பனை செய்வதாகவும் கூறினாா்‘ என்றாா் ஹரேஷ்வா் சுவாமி .
போலி விவசாய பொருள்களின் விநியோகச் சங்கிலி மற்றும் விநியோக நெட்வொா்க்கைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணை தொடா்ந்து நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.