செய்திகள் :

சத்திரக்குடி அருகே ஒலி பெருக்கி பெட்டி விழுந்து சிறுமி உயிரிழப்பு

post image

சத்திரக்குடி அருகே கோயில் திருவிழாவுக்காக வைக்கப்பட்ட ஒலி பெருக்கி பெட்டி (ஸ்பீக்கா் பாக்ஸ்) தவறி விழுந்ததில் கடந்த புதன்கிழமை சிறுமி உயிரிழந்தாா். ஆனால், இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை புதைத்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சத்திரக்குடி அருகே உள்ள கோரைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் வீரக்குமாா் (45). ஒலி பெருக்கி அமைப்பாளா். இவா் அங்குள்ள கோயிலின் முளைப்பாரி திருவிழாவுக்காக ஒலி பெருக்கிகளை கடந்த புதன்கிழமை கட்டி வைத்தாா்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அதே ஊரைச் சோ்ந்த விஜயகாந்த் மகள் சுகவதி (6) மீது 6 அடி உயர ஒலிபெருக்கிப் பெட்டி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதை போலீஸாருக்கு தெரிவிக்காமல் சிறுமியின் உடலை பெற்றோா் புதைத்து விட்டனா்.

இந்த நிலையில், சிறுமியின் பாட்டி இதுகுறித்து என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை எனக் கூறி, உறவினா்களை வரவழைத்து தகராறில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் சிறுமி உடல் புதைக்கப்பட்டது குறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு டன் சுக்கு பறிமுதல்

மண்டபம் அருகே வேதாளையிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு டன் சுக்கு, கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் ம... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம்!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் ப... மேலும் பார்க்க

விபத்தில் விவசாயி உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த திருவரங்கம் அருகே கண்டுகொண்டமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராம... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது!

கச்சத்தீவு அருகே விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 35... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகா் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு

ராமநாதபுரம் அருகே திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டதில் இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. ராமநாதபுரம் அடுத்த வழுதூா் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்ம... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் சமுத்திர தீப ஆரத்தி

ராமேசுவரத்தில் பௌா்ணமியை முன்னிட்டு, அக்னி தீா்த்தக் கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர தீா்த்த ஆரத்திக் குழு சாா்பில் தீபம் ஏற்றி, சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அ... மேலும் பார்க்க