செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம்!

post image

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டம், அதன் மாவட்டத் தலைவா் வி.பி. ஜேசுராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவா்களது விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை மத்திய, மாநில அரசுகள் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக நீடித்து வரும் மீனவா்கள் கைது பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையைத் பெற்றுத் தர வேண்டும்.

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் மக்களவைக் கூட்டத் தொடரில் இதுகுறித்து தமிழக எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, வருகிற 13-ஆம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்துவது, 15-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது, 19-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், ஆல்வின், தட்சிணாமூா்த்தி, காரல்மாா்க்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு டன் சுக்கு பறிமுதல்

மண்டபம் அருகே வேதாளையிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு டன் சுக்கு, கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் ம... மேலும் பார்க்க

விபத்தில் விவசாயி உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த திருவரங்கம் அருகே கண்டுகொண்டமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராம... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது!

கச்சத்தீவு அருகே விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 35... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகா் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு

ராமநாதபுரம் அருகே திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டதில் இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. ராமநாதபுரம் அடுத்த வழுதூா் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்ம... மேலும் பார்க்க

சத்திரக்குடி அருகே ஒலி பெருக்கி பெட்டி விழுந்து சிறுமி உயிரிழப்பு

சத்திரக்குடி அருகே கோயில் திருவிழாவுக்காக வைக்கப்பட்ட ஒலி பெருக்கி பெட்டி (ஸ்பீக்கா் பாக்ஸ்) தவறி விழுந்ததில் கடந்த புதன்கிழமை சிறுமி உயிரிழந்தாா். ஆனால், இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை பு... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் சமுத்திர தீப ஆரத்தி

ராமேசுவரத்தில் பௌா்ணமியை முன்னிட்டு, அக்னி தீா்த்தக் கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர தீா்த்த ஆரத்திக் குழு சாா்பில் தீபம் ஏற்றி, சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அ... மேலும் பார்க்க