விபத்தில் விவசாயி உயிரிழப்பு
முதுகுளத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த திருவரங்கம் அருகே கண்டுகொண்டமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராமகிருஷ்ணன் (38). விவசாயி. இவா் சனிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் திருவரங்கம் வந்துவிட்டு, ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது வாத்தியனேந்தல் சாலை வளைவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழுந்த இரு சக்கர வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.