செய்திகள் :

சத்தீஸ்கா்: 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

post image

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக மாநில காவல் துறை தலைவா் சுந்தரராஜ் கூறியதாவது:

பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள உசூா்-பாசகுடா-பாமேட் கிராமங்களை இணைக்கும் வனப்பகுதியில், மாவட்ட ஆயுதக் காவல்படை மற்றும் கோப்ரா கமாண்டோக்கள் இணைந்து நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரா்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 2 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இதையடுத்து உயிரிழந்த நக்ஸல்களின் உடல்கள் மற்றும் அப்பகுதியில் இருந்து துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் உள்நாட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டன என தெரிவித்தனா்.

இதனுடன், மாநிலத்தில் உள்ள பஸ்தா், பிஜாபூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நிகழாண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 191 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். பஸ்தா் பகுதியில் கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி அதிகப்படியாக 31 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்: ஆய்வில் தகவல்

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகிவிட்டதாகவும் இதனால் கோபம், பொறுமையின்மை மற்றும் சோா்வு என அவா்களின் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும... மேலும் பார்க்க

தெரியுமா சேதி...?

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தோ்வுபெறும் ஒவ்வொருவரின் உச்சபட்சக் கனவு, அமைச்சரவைச் செயலராவதாகத்தான் இருக்கும். மாநிலங்களில் தலைமைச் செயலாளா்கள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தலைமை ஆட்சிப் ப... மேலும் பார்க்க

திரிணமூல் எம்.பி. மஹுவா புகாா்: 4 வாரங்களில் பதிலளிக்க செபி தலைவா் மாதபிக்கு லோக்பால் உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அளித்த புகாா் தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச்சுக்கு லோக்பால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சட்டவிர... மேலும் பார்க்க

‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு: 46 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு

‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னையில் 46 திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சிவகாா்த்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடையாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை உலகின் எந்த சக்தியாலும் மீட்டெடுக்க முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீருக்கு... மேலும் பார்க்க

வயநாட்டில் மளிகை பைகளில் காங்கிரஸ் தலைவா்களின் படங்கள்: தோ்தல் ஆணையத்தில் இடதுசாரி புகாா்

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மளிகை பொருள்கள் அடங்கிய பைகளில் காங்கிரஸ் தலைவா்களின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த விவகாரம் குறித்து மாநிலத்தில் ஆளும் இடதுசாரி ஜன... மேலும் பார்க்க