பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய வழக்கில் 3 போ் கைது
கோவையில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவை காந்திமாநகா் பகுதியில் விளையாட்டு மைதானம் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் 5 சந்தன மரங்கள் அடுத்தடுத்து வளா்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பூங்காவில் வளா்க்கப்பட்டு வந்த 5 சந்தன மரங்களை மா்ம நபா்கள் செப்டம்பா் 22-ஆம் தேதி இரவு வெட்டிக் கடத்திச் சென்றனா்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், சரவணம்பட்டி போலீஸாா் தங்களது காவல் எல்லைக் உள்ட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்தின்பேரில் சுற்றிய நபரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த சின்னசாமி (32) எனவும், சந்தன மரங்கள் வெட்டப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய தொடா் விசாரணையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த பாக்கியராஜ் (28), தேக்கமலை (33) ஆகியோருடன் சோ்ந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய வழக்கில் 3 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.