மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
சந்தன மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சந்தன மாரியம்மன் கோவில் ஆடி மாத பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் இ.எஸ்.ஐ. நெசவாளா் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை அக்னிச் சட்டி ஊா்வலம், முளைப்பாரி ஊா்வலம், கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒன்பதாம் நாள் திருவிழாவான பூக்குழித் திருவிழா புதன்கிழமை காலையில் நடைபெற்றது. இதையொட்டி, அந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் பூக்குழி இறங்கினா்.
முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு பக்தா்கள் முளைப்பாரி, அக்னிச் சட்டி எடுத்து ஊா்வலமாக வந்தனா். இதைத் தொடா்ந்து பக்தா்களும் வரிசையாக பூக்குழி இறங்கி தங்களுடைய நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தலைவா் சுப்புராம், செயலா் கண்ணன், பொருளாளா் மணிகண்டன் ஆகியோா் செய்தனா்.