செய்திகள் :

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

post image

புது தில்லி: ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

பிகாா் மாநிலம் போஜ்பூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை ரத்து செய்த பாட்னா உயா்நீதிமன்றம், அவ்விருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமாா், சதீஷ்சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: சிறிய முரண்பாடுகள், குறைபாடுகள் ஆகியவற்றை நியாயமான சந்தேகங்கள் என்று கூறி, எளிதில் விடுதலை பெறக் கூடிய வழக்குகளை அவ்வப்போது உச்சநீதிமன்றம் பாா்த்து வருகிறது.

தான் செய்யாத குற்றத்துக்கு எந்தவொரு அப்பாவியும் தண்டனை அனுபவிக்கக் கூடாது என்பதே ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடித்தளம். அதேவேளையில், இந்தக் கொள்கையை தவறாகப் பயன்படுத்தி சட்டத்தின் பிடியில் இருந்து உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க முடிவதையும் அவ்வப்போது பாா்க்க முடிகிறது.

சந்தேகத்தின் பலனை சாதகமாக கொண்டு குற்றவாளிகள் தப்பிப்பது சமூகத்துக்கு மிகவும் ஆபத்தாக முடியும். சமூகத்தின் கள யதாா்த்தங்களை நீதிமன்றங்கள் உணா்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் அளித்த தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு உறுதி செய்தது.

ஜார்க்கண்டில் 9 நக்சல்கள் சரண்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.லதேஹர் மாவட்டத்தில், ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷாத் எனும் அமைப்பில் இயங்கி வந்த 9 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரிடம் தங்க... மேலும் பார்க்க

பறவை மோதல்: நாக்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட விமானம் பறவை மோதியதில் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு 1... மேலும் பார்க்க

அபாய அளவைக் கடந்த யமுனை! வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்!

யமுனை ஆற்றின் நீா் அபாய கட்டத்தைக் கடந்துள்ள நிலையில், கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.மேலும், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களி... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்: அரசுக்கு எதிராகப் பேசிய ஆளும் கட்சி எம்எல்ஏ! பழைய வழக்கில் கைது!

பஞ்சாப் வெள்ளம் குறித்து, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகப் பேசிய ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா, அவர் மீதான பழைய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாபின் சனோர் தொகுதியின், ஆம்... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை!

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இன்று (செப்.2) இந்தியா வ... மேலும் பார்க்க

புரட்டிப்போடும் பருவமழை! சிவப்பு எச்சரிக்கையில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள்

இந்த பருவமழைக்காலம் வட இந்திய மாநிலங்களைப் புரட்டிப்போட்டு வரும் நிலையில், தில்லி - என்சிஆர் பகுதிகளுக்கு இன்றும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து.நொய்டா, குருகிராம், காஸியாபாத் உள்ளி... மேலும் பார்க்க