3 நாள் கோடைகால சுற்றுலா முன்பதிவு தொடக்கம்: சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஏற்பாடு
சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக ஹைதராபாதில் மாற்று வீரர் சேர்ப்பு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற சமரன் ரவிச்சந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலகினார்.
இதையும் படிக்க: இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது; ரபாடா விவகாரத்தில் முன்னாள் ஆஸி. கேப்டன் காட்டம்!
இதனையடுத்து, சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக ஹர்ஷ் துபே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
உள்ளூர் போட்டிகளில் விதர்பா அணிக்காக ஹர்ஷ் துபே விளையாடி வருகிறார். இதுவரை 16 டி20 மற்றும் 20 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 18 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள துபே 941 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 127 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
Harsh Dubey joins the squad as a replacement for Smaran, who is ruled out due to injury.#PlayWithFirepic.twitter.com/Bd4vnLanGF
— SunRisers Hyderabad (@SunRisers) May 5, 2025
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஹர்ஷ் துபே ரூ.30 லட்சத்துக்கு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.