ஜம்மு - காஷ்மீர்: 4 மாதங்களில் 35 மக்கள், வீரர்கள் சுட்டுக்கொலை!
சமாதானபுரம்: அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படுமா? - வெயிலில் சிரமப்படும் பயணிகள்
திருநெல்வேலி நகரின் முக்கிய பகுதியான சமாதானபுரத்தில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வல்லநாடு, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் டவுன் (நகரப் பகுதிகள்) நோக்கிப் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்கின்றன.
மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்தப் பேருந்து நிறுத்தத்தின் இருபுறமும், பயணிகள் வெயிலிலும் மழையிலும் பாதுகாப்பாகக் காத்திருக்க இரண்டு நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த ஜனவரி மாதம், சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, அந்த இரண்டு நிழற்குடைகளும் அகற்றப்பட்டுவிட்டன.

இதனால் தற்போது, கொளுத்தும் வெயிலில் மக்கள் நிழலின்றி நிற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். குறிப்பாக, மூத்த குடிமக்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். நிறைய நேரங்களில் மக்கள் ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் நேரடியாக வெயில் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், பெரியவர்கள் அமர்வதற்கும் வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



“நிழற்குடைகள் இருந்தபோது நிழலில் நின்று ஓய்வெடுக்க முடிந்தது. இப்போது வெயிலில் நின்று காத்திருக்க வேண்டியுள்ளது. பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள்” என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!