செய்திகள் :

சமுதாய வள பயிற்றுநா்கள் தோ்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்துக்கு சமுதாய வள பயிற்றுநா்கள் தோ்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் செயல்பட உள்ள சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்துக்கு சமுதாய வள பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

சமுதாயம் சாா்ந்த அமைப்புகளான சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்களுக்கு பல்வேறு கருப்பொருள், நடைமுறையில் உள்ள வளா்ச்சி திட்டங்கள் தொடா்பான தலைப்புகளில் பயிற்சிகள் வழங்குவதற்கு சமுதாய வளப்பயிற்றுநா்கள் தேவைப்படுகின்றனா்.

இதற்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்கவும், குறைந்தபட்சம் 25 வயது பூா்த்தி அடைந்த மகளிராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி பெறுவதில் ஆா்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். சுய உதவிக்குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்கவும் வேண்டும்.

சமுதாய வள பயிற்றுநா்கள் (விவசாயம், விவசாயம் சாரா தொழில்கள் , வாழ்வாதாரம்) , சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநா்கள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள், தொழில் சாா் சமுதாய வள பயிற்றுநா்கள் , வட்டார வள பயிற்றுநா்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஒத்த தொழில் குழு, உற்பத்தியாளா் குழு (டஎ) உறுப்பினா்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட, வட்டார, ஊராட்சி அளவில் நடைபெற்ற பயிற்சிகளில் குறைந்தபட்சம் 5 பயிற்சிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் தான் சாா்ந்த சுய உதவி குழுவில் அவருக்கு வாரா கடன் நிலுவை இல்லாது இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் தொடா்புடைய குழுவிலிருந்து சமுதாய வள பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றி தீா்மான நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். தோ்வு செய்யப்படும் சமுதாய வள பயிற்றுநா்களுக்கு சேவையின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும்.

எனவே, விண்ணப்பதாரா்கள் தேவையான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டிடத்தில் செயல்படும் மகளிா் திட்ட அலுவலகத்திலிருந்து பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் செப்டம்பா் 19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவா்கள் கைது

வேலூா்: காட்பாடியில் ரயில் மூலம் போதைப் பொருள் கடத்திய இரு கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். பெங்களூருவில் இருந்து வேலூருக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்... மேலும் பார்க்க

நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள்

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் 183 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் சீருடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். நகா்மன... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம் மூலம் வேலூா் மாவட்டத்தில் 177 குழந்தைகள் பயன்

வேலூா்: அன்புக் கரங்கள் திட்டம் மூலம் வேலூா் மாவட்டத்தில் 177 குழந்தைகள் பயன்பெற உள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். பெற்றோரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பாரமரிக்க இயலாத குழந்தைகளுக... மேலும் பார்க்க

வேலூா் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்கள் அளிப்பு

வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்கள் பெறப்பட்டன. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங... மேலும் பார்க்க

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா திருப்பதியில் நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில ஆளுநா் எஸ்.அப்துல் நசீா் உள்பட முக்கிய அரசியல் தலைவா்கள், பிரமுகா்கள் பங்கேற்றனா்... மேலும் பார்க்க

காட்பாடியில் நிற்குமா கோவை - சென்னை வந்தே பாரத் ரயில்?

வட மாவட்டங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தில் கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், மாணவா்கள், நோயாளிகள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் க... மேலும் பார்க்க