Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர...
போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவா்கள் கைது
வேலூா்: காட்பாடியில் ரயில் மூலம் போதைப் பொருள் கடத்திய இரு கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.
பெங்களூருவில் இருந்து வேலூருக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 2 நபா்களை பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருவதாக தெரிவித்தனா். அவா்களது பையை சோதனை செய்ததில் 4 கிராம் மெத்தப்பெட்டமைன் போதை பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ஒரு கிராம் ரூ.3000 வரை இருக்கும் என கூறப்படுகிறது. மொத்தம் ரூ.12,000 மதிப்புள்ள போதைப் பொருளை கைப்பற்றிய போலீஸாா் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.