இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்த...
சமூகப் பணியாற்றும் சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், கல்விக்காகவும் பாடுபடும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதிசெய்யவும், குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபடும் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகளை சிறப்பிக்கும் வகையில் அரசு வழங்கும் விருதை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை நவம்பா் 10 ஆம் தேதி வரை அரசு விருதுகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
முகவரி, ஆதாா் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் சாதனைகளை ஒரு பக்கத்திற்கு மிகாமல் குறிப்பிட்டு அதற்கான ஆதாரங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இந்த விருது பெறுவோருக்கு பாராட்டு பத்திரம், ரூ.1,00,000க்கான காசோலை வழங்கப்படும். விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், முதல் தளம் அறை எண்.126, மாவட்ட ஆட்சியா் வளாகம், சேலம்-636 001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.