அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
சமூக ஆா்வலா் கொலை: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமயம் தொகுதி கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சலாஹுதீன் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் ஷேக் அப்துல்லா முன்னிலை வகித்தாா்.
எஸ்டிபிஐ மாநிலச் செயலா் ஹஸ்ஸான் கண்டன உரை நிகழ்த்தினாா்.