செய்திகள் :

``சமூக சேவை, விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பவர்'' -சி.பி.ராதாகிருஷ்ணனை புகழும் பிரதமர் மோடி

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை முன்நிறுத்தியுள்ளனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவரைக் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

மோடி பதிவு

அதில், "சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார்.

தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார்.

எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய நகர்வு!

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரைத் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

இவரையே இந்தியா கூட்டணி ஆதாரிக்குமா அல்லது வேறொரு வேட்பாளரை நிறுத்துமா என்பது தற்போது ஆர்வமுடன் கவனிக்கப்படுகிறது.

``அரசியலுக்கு வரும் புது முகங்கள் எல்லோரும் MGR வாரிசு என்கிறார்கள்'' - செல்லூர் ராஜூ

"தமிழக அரசியலில் எத்தனை பேர்தான் தன்னை எம்ஜிஆர் என சொல்வார்கள் எனத்தெரியவில்லை" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.செல்லூர் ராஜூகடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பாஜக, ... மேலும் பார்க்க

``நாங்கள் வெற்றி பெற ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம்'' - கேரளா பாஜக தலைவர்

ஏற்கெனவே பாஜக அரசின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்காளர்களை நீக்குகிறார்கள், அவர்களுக்கு தேவையான வாக்காளர்களைச் சேர்க்கிறார்கள் என்று ஏகப்பட்ட புகார்கள் எழுந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து ப... மேலும் பார்க்க

``வாக்குத் திருட்டைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை'' - பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி

"வாக்காளர் பட்டியலில் மோசடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டன" ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் 16 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

``விஜய் இத்தனை லட்சம் பேரைத் திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே அடித்திருக்கிறார்'' - திருமாவளவன்

த.வெ.க மாநாடு, தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருகை, அதிமுகவின் மீதான திமுகவின் விமர்சனம் குறித்து நேற்று விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.த.வெ.க மாநாடு"தமிழக வெற்ற... மேலும் பார்க்க

Doctor Vikatan: நெஞ்சு கரித்தல், எதுக்களித்தல் பிரச்னை; செரிமான மருந்துதான் ஒரே தீர்வா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக சாப்பிட்டதும் நெஞ்சு கரித்தல் பிரச்னையும், உணவு எதுக்களித்தல் பிரச்னையும்இருக்கிறது. பல காலமாக இதற்கு ஆண்டாசிட் சிரப் அல்லது மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன... மேலும் பார்க்க

``தலைவர்கள் இப்படி இருந்தால், ஊழலை எதிர்த்து எப்படி போராட முடியும்?'' - பிரதமர் மோடி

பதவி நீக்க மசோதாபிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டு, 30 சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை கடந்த 20-ம் தேதி... மேலும் பார்க்க