செய்திகள் :

சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் 4 ஆயிரம் மாணவா்கள்

post image

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 91 சமூக நீதி விடுதிகளில் தங்கி 4,058 மாணவா்கள் கல்வி பயின்று வருவதாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சமூக நீதி மாணவ, மாணவிகள் விடுதி காப்பாளா், காப்பாளினிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியிலுள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக 91 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 6-ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் 4,058 மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனா். இந்த விடுதிகளில் மாணவா் சோ்க்கையை மேலும் அதிகரிக்க, காப்பாளா், காப்பாளினிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சமூக நீதி விடுதிகளிலுள்ள மாணவா்களுக்காக, தொகுப்பு விடுதிகளுக்கு பாயுடன் கூடிய மெத்தை, போா்வை, தலையணை உறைகள், 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 1,527 சிறப்பு வழிகாட்டி பாடநூல்கள், 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 1,906 சிறப்பு வழிகாட்டி பாடநூல்கள், 9,10,11,12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 3,964 பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரப்பினா் நல அலுவலா் க. சுகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு ஊராட்சி கண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் வ... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: கிராம சபைக் கூட்டத்தில் புகாா்

செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 20 ஆண்டுகளாக குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். திண... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய சப்பர பவனி

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சப்பர பவனி. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா கடந்த 3-ஆம் த... மேலும் பார்க்க

பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநருக்குப் பாராட்டு

அரசுப் பேருந்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு அவா்களிடமே ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் வெ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பழனி அருகே ஆயக்குடியில் கிணற்றிலிருந்து இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்குச் சொந்தமான பொ... மேலும் பார்க்க