சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு ஊராட்சி கண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், வியாழன்கிழமை இரவு இவரது தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 3 ஆடுகளை தாக்கிக் கொன்றது.
இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பட்டாசுகளை வெடித்து சிறுத்தையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.
கண்ணனூா் மலைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.