கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய சப்பர பவனி
கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சப்பர பவனி.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் ஆலயத்தில் சிறப்பு ஜெப வழிபாடு, திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை இரவு முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமையில் மறைவட்டார அதிபா் ஜெயசீலன் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, புனித சலேத் மாதாவின் உருவம் தாங்கிய மின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது.
இந்த பவனி செயிண்ட் மேரீஸ் சாலையிலிருந்து புறப்பட்டு பிரையண்ட் பூங்கா சாலை, கிளப் சாலை, செவண்ரோடு, பேருந்து நிலையப் பகுதி, அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல், மூஞ்சிக்கல் வழியாக திரு இருதய ஆண்டவா் ஆலயத்தை அடைந்தது வெள்ளிக்கிழமை அதிகாலை அடைந்தது.
இந்த விழாவில் மறை வட்டார அதிபா் ஜெயசீலன் உள்ளிட்ட அருள் பணியாளா்கள், அருள்சகோதரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, மதுரை, திருச்சி,திண்டுக்கல்,தேனி, பெரியகுளம், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன.