செய்திகள் :

செப்டம்பரில் 75 வயது; ஓய்வு பெறுவதில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ்ஸை தாஜா செய்தாரா மோடி? - காங்கிரஸ்

post image

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார்.

மோடியின் உரை

அந்த உரையின் இடையில், அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்தும் பேசியிருந்தார். அதாவது, "இந்தியா என்கிற தேசம் அரசாங்கத்தாலும், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களாலும் மட்டும் உருவாகவில்லை.

மோடி
மோடி

அதில் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் உள்ளது. மக்கள் என்று குறிப்பிடுவதில் ஞானிகள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள், கூலித் தொழிலாளர்கள், தனிநபர்கள், அமைப்புகள் என அனைவரும் அடங்குவார்கள்.

100 ஆண்டுகளுக்கு முன்பு, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் என்ற ஒரு அமைப்பு உருவானது என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். அந்த அமைப்பின் 100 ஆண்டுக்கால தேச சேவை என்பது பெருமைக்குரியது மற்றும் புகழ்பெற்றது" என்று பேசியிருந்தார்.

காங்கிரஸ் கருத்து

இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "1925-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ் நேரடியாக இந்திய விடுதலைப் போராட்டத்தில் எதுவும் செய்யவில்லை.

அது பிரிட்டிஷிற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் பிற பெரிய போராட்டங்களில் இருந்து தள்ளியே இருந்தது.

அந்த அமைப்பின் நிறுவனர் கே.பி. ஹெட்கேவார், 1925-ம் ஆண்டுக்கு முன்னர், காங்கிரஸின் போராட்டங்களில் கலந்துகொண்டிருந்தார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் நிறுவியதற்கு பின்பு, அவர், காலனியவாத சக்திகளை எதிர்ப்பதை விட்டு, 'கலாச்சார தேசியவாதத்திற்கு' மாற்றிவிட்டார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

பிரிட்டிஷின் கோப்புகள், காங்கிரஸ் மற்றும் ஐ.என்.ஏகளை ஒப்பிடுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அச்சுறுத்தல் இல்லாதது என்று குறிப்பிடுகிறது.

1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது கூட, ஆர்.எஸ்.எஸ்ஸின் அப்போதைய தலைவர் கோல்வால்கர், அதன் உறுப்பினர்களை அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் எந்தவொரு சுதந்திர போராட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை என்று சர்தார் பட்டேலே குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் மரபு என்பது காலனியத்துவத்தை எதிர்த்து போராடுவது அல்ல. இந்தியர்கள் மத்தியில் வெறுப்பையும், பிரிவினையையும் உண்டாக்குவது ஆகும்.

இந்த வெறுப்பு சித்தாந்தை நம்மிடம் இருந்து மகாத்மா காந்தி தான் அகற்றினார்.

இருந்தும் பிரதமர் மோடி, 2025-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி தனது ஓய்வில் இருந்து தப்பிக்கவும், ஆர்.எஸ்.எஸ்க்காக இதை பேசியுள்ளார்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

விடுதலை போராட்டத்தில் இருந்து விலகி இருந்த அமைப்பிற்காக, இந்தியாவின் உண்மையான விடுதலை போராட்ட வீரர்களின் நினைவுகளை அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவின் விடுதலை என்பது புரட்சியாளர்கள், காங்கிரஸ் தலைமையிலான வெகுஜன இயக்கங்கள், ஐ.என்.ஏ வீரர்கள் மற்றும் கோடிக்கணக்கான சாதாரண குடிமக்களால் பெறப்பட்டது ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் இந்த விமர்சனம்?

ஆர்.எஸ்.எஸ்ஸின் எழுதப்படாத விதிகளில் ஒன்று, 'அவர்களது அமைப்பு மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது 75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்' என்பது.

மோடிக்கு வருகிற செப்டம்பர் 17-ம் தேதி 75 வயது ஆகிறது.

ஆக, அதில் இருந்து தப்பிக்கத்தான் மோடி ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்து மிக பெருமையாக பேசியுள்ளார் என்கிற விமர்சனம் எழுகிறது.

சமீபத்தில் கூட, ஆர்.ஆர்.எஸ்ஸின் தற்போதைய தலைவர் மோகன் பகவத், 75 வயதில் அரசியல் தலைவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார்.

Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். அந்த உரையில், ``இந்தியா வலிமையுடன் வளர்ந்து வருகிறது. தாய்நாட்டைப் போற்றுவத... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை: 'தலித்துகள் மனிதர்கள் இல்லையா?'- ஸ்டாலினுக்கு அம்பேத்கர் பேரன் கண்டனம்

சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்தும், தங்களது பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகைக்க... மேலும் பார்க்க

"நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?" - OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்... மேலும் பார்க்க

ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாமி வீட்டில் பரபரப்பு

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு இருக்கும் திண்டுக்கல் துரைராஜ் நகரில் காலை 7.30 மணி முதலேஅமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதே போல,சீலப்பாடியில்உள்ள அவரது மகன் ஐ.பி.செந்தி... மேலும் பார்க்க

`மும்பை மாநகராட்சி தேர்தலில் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி அமைத்து போட்டி’ - உத்தவ் கட்சி

மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்கும் இத்தேர்தல் உத்தவ் தாக்கரேயிக்... மேலும் பார்க்க

GST: `தீபாவளிப் பரிசு என மோடி கூறியுள்ளது தவறை ஒப்புக் கொள்வதற்கு சமம்!' - மாணிக்கம் தாகூர்

``சுதந்திரப் போராட்டத்தில் எந்த விதத்திலும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ்-ஐ சுதந்திர தின விழாவில் பெருமைப்படுத்தி பிரதமர் மோடி பேசியது நியாயமற்றது, கண்டிக்கத்தக்கது” என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடு... மேலும் பார்க்க