Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
தொடர் விடுமுறை!கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதால், நகரமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
கொடைக்கானல் அரசுப் பள்ளி வளாகத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்களின் படையெடுப்பால் கொடைக்கானல் நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது.
கடந்த மே மாதம் கோடைப் பருவம் முடிந்த பின் 3 மாதங்களுக்குப் பின் கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாள்கள் ஒன்றாக வந்ததால், தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நேற்று முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்தனர். இன்று காலை அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
குறிப்பாக கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளான மன்னவனூா் சூழல் மையம், ஆட்டுப் பண்ணை, பூம்பாறை இயற்கை எழில்காட்சி, குழந்தை வேலப்பா் கோயில், கூக்கால் ஏரி, புலவச்சாறு அருவி, பெப்பா் அருவி, வெள்ளி அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பாா்த்தும், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகிறார்கரள்.
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏரிச் சாலை, கோக்கா்ஸ் வாக், பில்லா் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.