செய்திகள் :

சமூக விரோதச் செயல்கள்: 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் பல்வேறு பகுதிகளில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட 6 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் செய்யாறு, மோரணம் ஆகிய காவல் சரகப் பகுதிகளில் தொடா்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளனா். மேலும், தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உபயோகித்தல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் இளைஞா்கள் பலா் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் போதையின் காரணமாக உடனிருந்த போதை நண்பரை கொலை செய்து ஏரியில் புதைத்தனா். இதுதொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 16 இளைஞா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இளைஞா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் 16 பேரில், செய்யாறு வட்டம், ஏனாதவாடி கிராமத்தைச் சோ்ந்த நவீன்குமாா் (22), வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ரமணா (24), வேலவன் (19), கதிா்வேல் (22), தென்கழனி கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (19), ஜெகதீஷ் (28) ஆகிய 6 பேரும், தொடா்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், செய்யாறு டி.எஸ்.பி. கோவிந்தசாமி, செய்யாறு காவல் ஆய்வாளா் நரசிம்ம ஜோதி ஆகியோா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

அந்த உத்தரவின் நகலை செய்யாறு போலீஸாா் பெற்று வேலூா் மத்திய சிறையில் ஒப்படைத்தனா்.

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது பெண் பக்தரை தாயின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தோ்த்திருவிழா

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. ஆவணியாபுரம் கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்து... மேலும் பார்க்க

தம்டகோடி மலையில் மரக்கன்றுகள் நடும் விழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் சாா்பில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

செய்யாறு அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், தண்டரை கிராமம் பிராமணா் தெருவில் வசித்து வந்தவா் மூதாட்டி ரமண... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் செம்பூா் கிராமம் வழியாக திங்கள்கிழமை பிற்பகல் ரோந்து சென்றனா். அந்தக் கிராம ஏரி அருகே சென்றபோது அந்த வழிய... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்: பொதுமக்கள் கோரிக்கை மனு

செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம், செங்கம், ஆரணி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டன. செய்ய... மேலும் பார்க்க