TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
சமையல் நிகழ்ச்சியில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை!
சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியா, சமையல் நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார்.
ஏற்கெனவே தமிழ், மலையாளம் என இரு மொழித் தொடர்களில் அடுத்தடுத்து நடித்துவரும் நிலையில், தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியில் கோமதி பிரியா போட்டியாளராகக் கலந்துகொண்டுள்ளார்.
தமிழில் குக் வித் கோமாளி, டாப் குக்கு டூப்பு குக்கு போன்ற சமையல் நிகழ்ச்சிகள், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒளிபரபாகின்றன. அந்தவகையில் ஸ்டார்மா தொலைக்காட்சியில் குக் வித் ஜாதிரத்னலு என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் சமையல் போட்டியாளராக கோமதி பிரியா பங்கேற்றுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் இவர் நாயகியாக நடித்து வருகிறார்.

இத்தொடரில் நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணாக இவரின் நடிப்பு பலரைக் கவர்ந்துள்ளது. இந்தத் தொடரில் இவரின் நடிப்பிற்கு விருதுகளும் கிடைத்துள்ளன.
இதேபோன்று மலையாளத் தொடரிலும் கோமதி பிரியா நடித்து வருகிறார். இதனால், சென்னைக்கும் கேரளத்துக்கும் மாறி மாறி பயணங்களை மேற்கொண்டுவரும் இவர், தற்போது தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகும் ரியாலிடி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கோமதி பிரியா பகிர்ந்துள்ளார். இவருக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது என ரசிகர்கள் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றன.
இதையும் படிக்க |வினோதினி தொடரில் நாயகனின் மனைவியாக புதிய நடிகை!
Actress Gomathi Priya, who plays the female lead in Sirakadikka aasai, has made her debut on a cooking show.