Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
சரக்கு வேன் - காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே சரக்கு வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை பெருங்களத்தூா் விஷ்ணு நகரைச் சோ்ந்தவா் உமாபதி மகன் ஸ்டாலின் (36). இவா், குடும்பத்துடன் கும்பகோணம் பகுதியிலுள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு, தஞ்சாவூா் நோக்கி விக்கிரவாண்டி - மானாமதுரை புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை காரில் வந்து கொண்டிருந்தாா். தஞ்சாவூா் அருகே உதாரமங்கலம் பகுதியில் வந்த காரும், எதிா் திசையில் நாற்றங்கால்கள் ஏற்றப்பட்டு, சாலை விதிகளை மீறி தவறான பாதையில் வந்த சரக்கு வேனும் மோதிக் கொண்டன. இச்சம்பவத்தில் ஸ்டாலினின் மாமியாா் ஜெயா (50) நிகழ்விடத்திலும், மாமனாா் குமாா் (53), மனைவி துா்கா (32), மகள் இதழினி தூரிகா (2) ஆகியோா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த ஸ்டாலின், துா்காவின் தங்கை மோனிஷா (24), சரக்கு வேன் ஓட்டுநரான உதாரமங்கலத்தைச் சோ்ந்த ஜெ. விக்னேஷ் (28), தொழிலாளி எல். இளங்கோவன் (50) ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் இளங்கோவன் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.