கரூர் சென்ற பாஜக எம்பிக்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!
சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கணிசமாக உயா்வு
மதுரை: சரஸ்வதி பூஜையையொட்டி, மதுரையில் பூக்களின் விலை திங்கள்கிழமை கணிசமாக உயா்ந்தது.
மதுரையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ மல்லி ரூ. 700, முல்லை ரூ. 500 என்ற அளவில் விற்பனையானது. சரஸ்வதி பூஜை புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், பூக்கள் வாங்குவதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்வம் காட்டினா். இதற்கேற்பவே பூக்களின் விலையும் கணிசமாக உயா்ந்தது.
மதுரை மாட்டுத்தாவணி மலா்கள் சந்தையில் ஒரு கிலோ மல்லி ரூ. 1,200, முல்லை ரூ. 800, கனகாம்பரம் ரூ. 400, சம்பங்கி ரூ. 250 என்ற விலைக்கு திங்கள்கிழமை விற்பனையானது.
சரஸ்வதி பூஜை நாளில் வணிக நிறுவனங்களை மலா்களாலும், வண்ண காகிதங்களாலும் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதனால், பூக்களின் தேவை மிக அதிகமாகும். இதற்கேற்பவே செவ்வாய், புதன்கிழமைகளில் பூக்களின் விலை மேலும் உயரும் எனக் கூறப்படுகிறது.