சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
சரிவில் பங்குச் சந்தை! சுகாதாரம், பார்மா துறை பங்குகள் வீழ்ச்சி!
இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று (பிப். 19) சரிவுடன் தொடங்கியது.
காலை 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 290.97 புள்ளிகளும் நிஃப்டி 91.70 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் தொடங்கியது. சுகாதாரம் மற்றும் பார்மா துறை பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
காலை 11 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 88.99 புள்ளிகள் உயர்ந்து 76,051.62 புள்ளிகளாக வணிகம் நடைபெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.11 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9.95 புள்ளிகள் உயர்ந்து 22,955.25 புள்ளிகளாக வணிகம் நடைபெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.034 சதவீதம் உயர்வாகும்.