கூட்டணி நிலைபாட்டை அறிவிக்கும் விஜய்? தவெக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!
சரிவில் முடிந்த பங்குச் சந்தை! 25,000-யைக் கடந்த நிஃப்டி!
பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) 2-வது நாளாக சரிவுடன் நிறைவடைந்துள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,540.74 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் அதிகபட்சமாக 83,850.09 புள்ளிகள் வரை எட்டியது.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 170.22(0.2%) புள்ளிகள் குறைந்து 83,239.47 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.
அதேபோல தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25,505.10 என்ற புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் வா்த்தக இறுதியில் 48.10(0.19%) புள்ளிகள் குறைந்து 25,405.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 25,000-க்கும் கீழ் சென்ற நிலையில் இன்று மீண்டு 25,000-யைக் கடந்து முடிந்துள்ளது.
முதலில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்ட நிலையில் பின்னர் ஏற்ற, இறக்கத்திலேய இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதன் அதிகபட்சத்திலிருந்து 610 புள்ளிகள் சரிந்தது, நிஃப்டி 182 புள்ளிகள் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸில் 30 பங்குகளில் 18 பங்குகள் விலை குறைந்தன. கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் டைட்டன் ஆகியவை அதிகம் இழப்பைச் சந்தித்த முதல் 5 நிறுவனங்கள். இவை 1.9% முதல் 0.76% வரை சரிந்தன.
அதேநேரத்தில் மாருதி சுசுகி, இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், என்டிபிசி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.