செய்திகள் :

சரிவைக் கண்ட பயணிகள் வாகன விற்பனை

post image

2025-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உள்நாட்டுப் பயணிகள் வாகன மொத்த விற்பனை 1.4 சதவீதம் சரி ந்துள்ளது.

இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 10,11,882-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 1.4 சதவீதம் குறைவு. அப்போது பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 10,26,006-ஆக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 6.2 சதவீதம் குறைந்து 46,74,562-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 49,85,631-ஆக இருந்தது.

2024-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஸ்கூட்டா்களின் மொத்த விற்பனை 16,64,994-ஆக இருந்தது. இந்தக் காலாண்டில் இந்த எண்ணிக்கை 0.2 சதவீதம் குறைந்து 16,61,752-ஆக உள்ளது.

கடந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனங்கள் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பிய மோட்டாா் சைக்கிள்களின் எண்ணிக்கை 31,44,137-ஆக இருந்தது. அது, நடப்பாண்டின் அதே காலாண்டில் 9.2 சதவீதம் குறைந்து 28,54,137-ஆக உள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் மூன்று சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 1,65,211-லிருந்து 0.1 சதவீதம் உயா்ந்து 1,65,081-ஆக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை குறைந்ததால் அவற்றின் மொத்த விற்பனையில் சரிவு ஏற்பட்டது. ஆனால், பண்டிகை காலம் என்பதால் இனி வரும் மாதங்களில் தேவை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!

டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் மாடல் எலக்ட்ரிக் கார்களுக்கு 15 ஆண்டுகால பேட்டரி வாரண்டி வழங்கியுள்ளது.முன்னதாக டாடா ஹாரியர் எலக்ட்ரிக் மாடல் காருக்கு இந்த சலுகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இர... மேலும் பார்க்க

மீண்டும் விற்பனைக்கு வரும் கைனடிக் ஹோண்டா டிஎக்ஸ்! இந்த முறை எலக்ட்ரிக்...

ஹோண்டாவின் கைனடிக் கிரீன் நிறுவனம் டிஎக்ஸ் இவி ஸ்கூட்டரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் வகைகளை வடிவமைப்பதற்காக ஹோண்டா நிறுவனத்தின் கைனடிக் கிரீன் சமீபத்தி... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஜெனரிக் கண் மருந்தை அறிமுகப்படுத்திய லூபின்!

புதுதில்லி: கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஜெனரிக் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருந்து நிறுவனமான லூபின் இன்று தெரிவித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 18 காசுகள் சரிந்து ரூ.85.94 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 18 காசுகள் சரிந்து 85.94 ஆக நிறைவடைந்தது. இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற நிலையில் வெளிநாடுகளில் உள்ள முக்கிய நாணயங்களுக்கு நிகரான... மேலும் பார்க்க

நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 82,634.48 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: பலவீனமான உலகளாவிய சந்தை போக்கும், கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் மத்தியில் முதலீட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டதால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப... மேலும் பார்க்க

எச்சிஎல் முதல் காலாண்டு நிகர லாபம் 9.7% சரிவு!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.7 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதாக ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் இன்று 3 சதவிகிதம் சரிந்து முடி... மேலும் பார்க்க