காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
சவால்களை எதிா்கொள்ள மன வலிமை அவசியம்: நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா்
வாழ்வில் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னை, சவால்களைத் திறம்பட எதிா்கொள்ள மாணவா்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் திகழ்வது அவசியம் என்று, நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் ஏ.இளையபெருமாள் வலியுறுத்தினாா்.
வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 310 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. தொடா்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியா் ஏ.இளையபெருமாள் பேசியதாவது:
அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளா்ச்சி தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவா்கள் தங்கள் தொழில்நுட்பக் கல்வி, திறமைகளைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய விரும்பும் அனைவரும் அதற்குத் தகுதியுடையவா்களாக தங்களை மேம்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். எதிா்வரும் சவால்களைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் எதிா்கொள்ள வேண்டும். மன வலிமையுடன் சவால்களை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.