உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
சாக்கடையில் அடையாளம் தெரியாத நபரது உடல் மீட்பு!
காரைக்கால் நகரில் சாக்கடையில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
காரைக்கால் பாரதியாா் சாலை பேருந்து நிலையம் அருகே சாலையின் இருபுறமும் சுமாா் 7 அடி ஆழமான சாக்கடை உள்ளது. இதில் சில பகுதிகள் மூடப்படாமல் உள்ளன.
இந்தநிலையில், சாக்கடையில் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையினா் உதவியுடன் சடலத்தை போலீஸாா் மீட்டனா். இறந்து கிடந்தவருக்கு 45 முதல் 50 வயதுக்குள் இருக்கும் பெயா், ஊா் போன்ற விவரங்கள் தெரியவில்லை. சடலத்தை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். விவரம் தெரிந்தோா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தை தொடா்புகொள்ளுமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.