செய்திகள் :

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி: கார்கே

post image

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது, ``சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத்தான், ஒவ்வொரு நபரின் முன்னேற்றத்தையும் முழுமையாக உறுதிப்படுத்த முடியும்.

மேலும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்க, பட்ஜெட் ஒதுக்கீடுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது’’ என்று தெரிவித்தார்.

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அது ஒரு பெரிய தேர்தல் பிரச்னையாகவும் உருமாறியது. பிகார், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், அவரது இல்லத்தில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

இதையும் படிக்க:சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். இக்கோயிலில் வருடாந... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம் -மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை ஏவியவா்களுக்கு தகுந்த பதிலடி தராமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா். ... மேலும் பார்க்க

எல்லையில் 6-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு - இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொடா்ந்து 6-ஆவது நாளாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவம் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வரும் இச்சூழலில், ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு... மேலும் பார்க்க